ஐதராபாத்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஷ்டபிஸுர் ரகுமான் ஐதராபாத்தின் சிறந்த பந்துவீச்சாளராக கருதப்படுகின்றனர்.
அவருடைய இந்தியா வருகையை ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்தார். 2016 ஐபில்-இல் ஐதராபாத் கோப்பையை தட்டி செல்ல முக்கிய காரணமாய் இருந்தவர் முஷ்டிபிஸுர் ரகுமான். ஏப்ரல் 12 அன்று நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக களமிறங்குவார என எதிர்பார்க்க படுகிறது.
ஐபில் தொடங்குவதற்கு முன்பு ரகுமான் இந்த ஐபில் தொடரை ஆட மாட்டார் என தகவல் வந்தது. சாம்பியன்ஸ் ட்ரோப்பி காரணமாக, ஐபில்-இல் பங்கேற்க ரகுமானுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்கவில்லை.
இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாட இருப்பதால், ஐதராபாத் ஆடிய முதல் 2 போட்டிகளில் பங்குகொள்ளவில்லை. இலங்கைக்கு எதிரான மூன்று விதமான தொடரிலும் சமன் செய்தது வங்கதேசம்.
சாம்பியன்ஸ் ட்ரோப்பி காரணமாக, ஐபில்-இல் பங்கேற்க ரகுமானுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்கவில்லை. அதன் காரணமாக ரகுமானும் ஐபில்-இல் கலந்து கொள்ள போவது இல்லை என்று சொல்லிருந்தார்.
பிசிசிஐ கோரிக்கையை ஏற்று ரகுமானை ஐபில் விளையாட அனுமதித்தது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.
ஆனாலும் அடுத்த ஆப்பு காத்து கொண்டிருந்தது. வங்கதேசம், அயர்லாந்து மற்றும் நியூஸிலாந்து பங்கேற்கும் முத்தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. அதற்காக, ஏப்ரல் 26-இல் இருந்து 10 நாள் பயிற்சி செய்ய ரகுமானை ஏப்ரல் 20-இல் திரும்பி நாடு திரும்பும்படி வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது.
ஆனால், ரகுமான் பயிற்சியை தவிர்த்து விட்டு முழு ஐபில் போட்டிகளிலும் கலந்து கொள்ளுவார் என செய்தி வந்துள்ளது.
இந்த நேரத்தில் சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்ட அணி எது என்று கேட்டால், சன் ரைசர்ஸ் ஐதராபாத் என்ற பெயரே ஒலிக்கும். ஆஷிஷ் நெஹ்ரா, பரிந்தர் சரண், புவனேஸ்வர் குமார் இருக்க கூடிய அணியில் ரகுமானும் இணைந்தால் எதிரணியின் வீரர்களை பிரித்து மேய்ந்து விடுவார்கள்.