ஐபில்-இல் சிக்ஸர் அடிப்பது சுவாரசியமாகவும் அதைவிட முக்கியமானதும் கூட. போட்டியின் போக்கையையே மாற்ற கூடிய வல்லமை கொண்டது சிக்ஸர்கள். அதிகமாக சிக்ஸர் அடிக்கும் அணிதான் ஐபில்-இல் ஆதிக்கம் செலுத்தும்.
அதேபோல், அதிக சிக்ஸர் அடிக்கும் வீரர்கள் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்துவர். எந்த அணியில் அதிக ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள் இருக்கிறார்களோ, அந்த அணி வெற்றி பெரும்.
ஐபில்-இல் அதிக சிக்ஸர் அடிப்பவர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்படும். ஒவ்வொரு போட்டியிலும் அதிக சிக்ஸர் விளாசுபவர்களுக்கு,Maximum Sixes Award வழங்கப்படும். அதிக சிக்ஸர் அடிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும் கோப்பையும் அளிக்கப்படும். இரு வீரர்களும் சமமாக சிக்ஸர் அடித்திருந்தால், யார் அதிக தூரம் அடித்திருக்கிறார்கள் என்று பார்த்து, விருதளிப்பார்கள்.
ஐபில் முடிவில் அதிக சிக்ஸர்கள் அடித்தவருக்கு சிறப்பு விருது வழங்குவார்கள். அதிக சிக்ஸர் விளாசுபவர்களுக்கு, YES Bank Maximum வழங்கப்படும். அதிக சிக்ஸர் அடிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும் கோப்பையும் அளிக்கப்படும். இரு வீரர்களும் சமமாக சிக்ஸர் அடித்திருந்தால், அந்த சீசனில் இரண்டு நபரில் யார் அதிக தூரம் அடித்திருக்கிறார்கள் என்று பார்த்து, விருதளிப்பார்கள்.
ஐபில் 10-இல் பங்கேற்கும் 8 அணிகள் – டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் XI பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் லயன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெய்ன்ட்ஸ்.
ஐபில்-10: அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியல்
1. ஏபி டி வில்லியர்ஸ் (RCB) – 9 (2 இன்னிங்ஸ்)
2. கிறிஸ் லின் (KKR) – 9 (2 இன்னிங்ஸ்)
3. கிளென் மேக்ஸ்வெல் (KXIP) – 8 (2 இன்னிங்ஸ்)
4. ஹர்டிக் பாண்டியா (MI) – 6 (2 இன்னிங்ஸ்)
5. ரிஷப் பண்ட் (DD) – 6 (2 இன்னிங்ஸ்)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 12/04/2017