ஐபில்-இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறந்த அணியாக கருத படுகிறது. பஞ்சாபிடம் சுனில் நரேனை தொடக்க ஜோடியாக அழைத்து வந்தார் கம்பிர்.கம்பிரை ஏமாற்றாமல் நரேன் 18 பந்துகளில் 37 ரன் அடித்து அசத்தினார். புஞ்சாபுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. முதல் ஆட்டத்தில் கிறிஸ் லின்னின் ருத்ரதாண்டவத்தால் குஜராத்தை நொறுக்கி 10 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் மும்பையிடம் தோல்வி பெற்றது. அந்த தோல்வியை மறைக்க பஞ்சாபை பந்தாடியது கொல்கத்தா. பவர்-பிலே ஓவரில் 76 ரன் அடித்தது கொல்கத்தா. இது தான் கொல்கத்தாவிற்கு பவர்-பிலேவில் அதிகபட்ச ரன் ஆகும். நரேன் முதலில் பஞ்சாப் பந்துவீச்சாளர்களை பந்தாடினார். அதன் பிறகு வந்த உத்தப்பா மற்றும் மனிஷ் பாண்டே கம்பிருடன் ஜோடி சேர்ந்து 16 ஓவரில் கொல்கத்தாவிற்கு வெற்றியை தேடி தந்தனர்.
நேருக்கு நேர்:
இதுவரை ஐபில்-இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் நேருக்கு நேர் 9 போட்டிகள் ஆடியுள்ளார். அதில் கொல்கத்தா 6 போட்டியும் ஐதராபாத் 3 போட்டியும் வென்றுள்ளது. இதிலும், கொல்கத்தாவின் கை தான் ஓங்கியுள்ளது.
இந்த சீசனில்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – வெற்றி, தோல்வி, வெற்றி.
கணித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் XI:
கவுதம் கம்பிர், ராபின் உத்தப்பா, மனிஷ் பாண்டே, யூசுப் பதான், சூர்ய குமார் யாதவ், கோலின் டீ க்ராந்தோம்மே , கிறிஸ் ஓக்ஸ், சுனில் நரேன், பியூஷ் சாவ்லா, ட்ரெண்ட் போல்ட், உமேஷ் யாதவ்.