ஜெயதேவ் உனட்கட் ஹாட்ரிக் விக்கெட் மூலம் புள்ளி பட்டியலில் முன்னேறியது புனே 1

ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது புனே அணி.

வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் இன்று ஐ.பி.எல் இல் முதல் முறையாக ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்தார்.கடைசி ஒவேரில் இவர் ஒரு ரன்கள் கூட கொடுக்கவில்லை.ஜெயதேவ் உனட்கட் நான்கு ஓவர்களில் 30 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் புனே அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது, 12 போட்டிகளில் 8 ஆட்டத்தில் வெற்றி பெற்று 16 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 12  போட்டிகளில் 6 போட்டிகள் வெற்றி பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.

இதுவரை  சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி உடன் நடந்த இரண்டு போட்டிகளிலும் புனே அணி வெற்றி போற்று உள்ளது.

ஹைதராபாத் அணியில் அதிக பட்சகமாக யுவராஜ் 47 ரன்களும் வார்னர் 40 ரன்களும் தவான் 19 ரன்களும் எடுத்தனர் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

புனே அணியில் ஜெயதேவ் உனட்கட் 5 விக்கெட்களும் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்களும் தாஹிர் 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

இதனால் புனே அணி பட்டியலில் 2 இரண்டாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *