குஜராத்துக்கு எதிரான போட்டியில் 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்த ரஷீத் கான், ஊதா நிற தொப்பியை மைபற்றினார். அவருடைய சூழலால் குஜராத் அணியால் 20 ஓவரில் 135 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அவர் இப்பொழுது 2 போட்டிகளில் 5 விக்கெட் எடுத்துள்ளார்.
ஐதராபாத்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், குஜராத் அணியால் ஒரு பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை. ரஷீதின் மூன்று விக்கெட்டுகள் – பிரண்டன் மெக்கல்லம், ஆரோன் பின்ச் மற்றும் சுரேஷ் ரெய்னா.
இந்த மூன்று பேட்ஸ்மேன்கள் ரஷீதின் லெக் பிரேக் மற்றும் கூக்லியை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். இந்தியாவில் பல ரசிகர்களை ஈழத்துள்ளார் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான்.
முதல் இன்னிங் முடிந்த பின்னர் பேட்டியில், மெக்கல்லம் விக்கெட் தான் எனக்கு பிடித்தது என்றார் ரஷீத் கான்.
“எனக்கு இது ஒரு அற்புதமான தருணம். நான் கடைசி வரை நன்றாக செயல் பாடுவேன். என்னுடைய கூக்லி பந்துகளை ஆட பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள். இங்கு ஆதரிக்கும் அனைவர்க்கும் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன். நான் சூழ்நிலைக்கு ஏற்ப பந்து வீசுவேன். மெக்கல்லம் விக்கெட் தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எங்களுடைய வீரர்கள் இந்த ரன்னை கண்டிப்பாக துரத்தி வெற்றி வாங்கி தருவார்கள்” என்று ரஷீத் கான் கூறினார்.
குஜராத்துடைய முதல் விக்கெட் மெக்கல்லம் ரஷீதிடம் LBW ஆக, புவனேஸ்வரிடம் சிக்கினார் ஜேசன் ராய். அடுத்து வந்த பின்ச் மற்றும் ரெய்னா, ரஷீதிடம் LBW ஆகி பெவிலியன் திரும்பினர். தினேஷ் கார்த்திக் மற்றும் வெய்ன் ஸ்மித், 5வது விக்கெட்டிற்கு 56 ரன் சேர்த்தனர்.