இத்தனை ஆண்டுகள் ஆகியும் பெங்களூரு அணி கோப்பையை கூட வெல்லாததற்கு இது ஒன்றுதான் காரணம் கெவின் பீட்டர்சன் ஓபன் டாக்!!
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஆக இருந்தவர் கெவின் பீட்டர்சன். தென்னாப்பிரிக்காவில் பிறந்து இங்கிலாந்து அணிக்காக ஆடி அந்த அணிக்காக பல ஆயிரம் ரன்களை குவித்தவர். இவர் கடந்த 12 வருடங்களாக சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டவர். ஐபிஎல் தொடரிலும் பல்வேறு அணிகளுக்காக விளையாடி இருக்கிறார்.

டெல்லி, பெங்களூரு புனே போன்றவைகளுக்காக ஐபிஎல் தொடரில் 36 போட்டிகளில் ஆடி ஆயிரம் ரன்கள் குவித்திருக்கிறார். ஒரு சதமும் 4 அரை சதமும் அடித்து இருக்கிறார். தற்போது இவர், இதுவரை 12 முறை ஐபிஎல் தொடரில் இருந்தாலும், ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை பெங்களூரு அணி.அந்த அணியில் என்ன பிரச்சனை என்பதை பற்றியும், ஏன் அந்த அணியால் தற்போது வரை ஒரு கோப்பை வெல்ல முடியவில்லை என்பது பற்றியும் பேசியிருக்கிறார்.
அவர் கூறுகையில் “தற்போது வரை எத்தனை ஐபிஎல் தொடர்களில் நான் பங்கு பெற்றிருக்கிறேன் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. கடந்த சில வருடங்களாக பல நூறு போட்டிகளில் உட்கார்ந்து ஒவ்வொரு அணியை பற்றியும் ஒவ்வொரு அணியின் தன்மை பற்றியும் தொலைக்காட்சிகளில் விவாதித்து வருகிறேன். ஆனால் எப்போது பார்த்தாலும் பெங்களூரு அணியில் ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் பெங்களூர் அணி வரும்போது இந்த முறை அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியுமா என்ற ஒரு கேள்விக்கு இருந்துகொண்டுதான் இருக்கிறது. பேட்டிங்கில் எப்போதும் தங்களை நிறுபித்துவிடுவார்கள். பேட்டிங்கில் எப்போதும் அந்த அணியை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது. மிகச் சிறந்த சர்வதேச வீரர்கள் அந்த அணி வைத்திருக்கிறது. ஆனால் பந்து வீச்சில் தான் வருடாவருடம் கோட்டை விட்டு விடுகிறார்கள்.
அங்குதான் அவர்கள் கோப்பையை இழந்து விடுகிறார்கள். கடந்த வருடம் டேல் ஸ்டெய்ன் அணியில் இருந்தார். ஆனால் அவரால் தொடர்ந்து பல போட்டிகளில் விளையாட முடியவில்லை. இந்த வருடம் என்ன செய்யப்போகிறார்கள் என்பது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்திருக்கிறார்” கெவின் பீட்டர்சன்.