கத்தேரைன் ஹெலன் பிரண்ட்
1985ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி பிறந்தார் கத்தேரைன் ஹெலன் பிரண்ட் . சிறப்பாக கிரிக்கெட் விளையாடும் அவர் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியிலும் இருந்தார். 2006 மற்றும் 2011இல் இங்கிலாந்தின் சிறந்த மகளிர் வீராங்கனை என்ற விருதை வென்றார். இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். 2004இல் நியூஸிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர், 2005இல் தென்னாபிரிக்காவில் நடந்த உலகக்கோப்பையில் விளையாடினார். அவர் 14 விக்கெட் எடுத்திருக்கிறார்.