#8 இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து, 2015 உலகக்கோப்பை, கிறிஸ்ட்சர்ச்
2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்க இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து இடையே நடைபெற்ற போட்டியின்போது, ரசிகர்களில் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை அத்துமீறி ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக மைதானத்தின் உள்ளே ஓட துவங்கினார். சில வீரர்களையும் அவர் சீண்டி இருக்கிறார். இதனால் காவலர்கள் அவரை உடனடியாக பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவர் விசாரணையின்போது மார்க்கெட்டிங் செயலுக்காக செய்திருக்கிறார் என தெரியவந்தது.