வீடியோ: ‘ஹலோ அஸ்வின், நான் க்ரீஸ்க்குள்ள தான் இருக்கேன்’ தனது அணிக்கு வந்த அஷ்வினை கிண்டலாக வரவேற்ற ஜோஸ் பட்லர்!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எடுக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின்-ஐ கிண்டலாக வரவேற்று இருக்கிறார் ஜோஸ் பட்லர். பெங்களூருவில் ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 10 வீரர்கள் பத்து மற்றும் அதற்கு மேற்பட்ட கோடிகள் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக இஷன் கிஷன் 15.25 கோடிக்கும், தீபக் சஹர் 14 கோடிக்கும் எடுக்கப்பட்டது அதிகபட்சமாக இருக்கிறது. இன்னும் சில வீரர்கள் பத்து கோடிக்கு மேல் சென்று பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். சென்னை, மும்பை போன்ற அணிகள் […]