என்னங்கடா 15 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகுறீங்க... பிக்பாஸ் லீகில் நடந்த வினோதம்! சிட்னி தண்டர்ஸ் 1

பிக்பாஸ் லீகில் 15 ரன்களுக்கு சிட்னி தண்டர்ஸ் அணி ஆல் அவுட் ஆனது. இது டி20 கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையாக பார்க்கப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் லீகில் நடந்த ஐந்தாவது போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் இரு அணிகளும் மோதின. இப்போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அடிலேய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

அடிலேய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் அடித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கிறிஸ்ட் லின் 36 ரன்களும் காலின் டி கிராந்தோம் 33 ரன்களும் அடித்திருந்தனர்.

சிட்னி தண்டர்ஸ்

சிட்னி தண்டர்ஸ் சார்பில் நன்றாக பந்து வீசி வந்த பரூக்கி மூன்று விக்கெட்டுகளையும், டேனியல் சம்ஸ், குரிந்தர் சந்து மற்றும் ப்ரெண்டன் டாக்கட் மூவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.

தனது சொந்த மைதானத்தில் 140 ரன்கள் என்ற இலக்கை எளிதாக சிட்னி தண்டர்ஸ் அணி சேஸ் செய்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படியே தலைகீழாக மாறி மிக மோசமான வரலாற்றை டி20 கிரிக்கெட்டில் படைத்தது.

என்னங்கடா 15 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகுறீங்க... பிக்பாஸ் லீகில் நடந்த வினோதம்! சிட்னி தண்டர்ஸ் 2

சிட்னி தண்டர் அணியின் ஒரு பேட்ஸ்மேன் கூட ஐந்து ரன்கள் எட்டவில்லை. பந்துவீச்சில் அசத்திய அடிலேய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி பந்துவீச்சாளர் ஹென்றி தாண்டன் 2.5 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உட்பட மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு பந்துவீச்சாளர் வெஸ் அகர் இரண்டு ஓவர்களில் ஆறு ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சிட்னி தண்டர்ஸ் அணி 5.5 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆட்டநாயகனாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹென்றி தான்டன் தேர்வு செய்யப்பட்டார்.

சிட்னி தண்டர்ஸ்

டி20 கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு அணியும் 15 ரன்களுக்குள் சுருண்டதே இல்லை. இந்த ஒரு மோசமான சாதனையை சிட்னி தண்டர்ஸ் அணி தற்போது படைத்திருக்கிறது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *