ஆஸ்திரேலியா சர்வதேச அணியில் இடம் பிடித்த இந்திய விவசாயியின் 19 வயது மகன் ! குவியும் பாராட்டுக்கள் 1

ஆஸ்திரேலியா சர்வதேச அணியில் இடம் பிடித்த இந்திய விவசாயியின் 19 வயது மகன் ! குவியும் பாராட்டுக்கள் 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடனான மிகப்பெரிய தொடரில் விளையாடி  ஒருநாள் தொடரை கைப்பற்றி உள்ளது. ஒருநாள் தொடரை கைப்பற்றி இருந்தாலும் டி20 மட்டும் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி  இந்தியாவுடன் தோல்வி அடைந்திருக்கிறது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக நியூசிலாந்துடன் டி20 தொடரில் விளையாட இருக்கிறது. 

நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ள டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை தற்போது அறிவித்திருக்கின்றனர். இந்த ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், பென் மெக்டெர்மொட், ரிலே மெரிடித், ஜோஷ் பிலிப், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், தன்வீர் சங்கா, டி’ஆர்ச்சி ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆஷ்டன் டர்னர், ஆண்ட்ரூ டை, ஆடம் ஜாம்பா ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

ஆஸ்திரேலியா சர்வதேச அணியில் இடம் பிடித்த இந்திய விவசாயியின் 19 வயது மகன் ! குவியும் பாராட்டுக்கள் 2

இந்த ஆஸ்திரேலியா டி20 சர்வதேச அணியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தன்வீர் சங்கா இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த தன்வீர் சங்கா பஞ்சாப்பை பூர்விகமாக கொண்டிருக்கும் ஜோஹா சிங் சங்காவின் 19 வயது மகன் ஆவார். 19 வயதேயான இந்திய வம்சாவளியை சேர்ந்த தன்வீர் சங்கா ஆஸ்திரேலி சர்வதேச அணியில் இடம் பெற்றிருப்பது பெரிய அளவில் பார்க்கப்படுகிறது. 

1997 எல்லாம் ஆண்டு தன்வீர் சங்காவின் பெற்றோர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்தனர். 

ஆஸ்திரேலியா சர்வதேச அணியில் இடம் பிடித்த இந்திய விவசாயியின் 19 வயது மகன் ! குவியும் பாராட்டுக்கள் 3

பஞ்சாபில் விவசாயம் செய்து வந்த அவரது தந்தை தற்போது ஆஸ்திரேலியாவில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். ஆஸ்திரேலிய உள்ளூர் மற்றும் ஆஸ்திரேலியா 19  அணியில் சிறப்பாக விளையாடியதால் சர்வதேச அணியிலும் இடம் பெற்று இருக்கிறார் தன்வீர் சங்கா.

இதுகுறித்து அவர் கூறுகையில் “ நான் ஆஸ்திரேலியா சர்வதேச அணியில் இடம் பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.  ஆனால் இந்த செய்தி கேட்டபோது நிலவை தொட்டது போலிருந்தது. 19 வயதிலேயே சர்வதேச அணியில் இடம்பெறுவது எல்லாம் ஒரு வாரம்”  என்றார் தன்வீர் சங்கா. இவரது விடாமுயற்சியை கண்டு அனைவரும் பாராட்டுகின்றனர்.

ஆஸ்திரேலியா சர்வதேச அணியில் இடம் பிடித்த இந்திய விவசாயியின் 19 வயது மகன் ! குவியும் பாராட்டுக்கள் 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *