ஒத்தையா நின்னு கெத்தாக ஜெயிச்சு கொடுத்த கேஎல் ராகுல்.. பயம்காட்டிய ஸ்டார்க்கை அடக்கிய ஜடேஜா-கேஎல் ராகுல் ஜோடி.. இந்தியா அபார வெற்றி! 1

கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா இருவரின் சிறந்த பார்ட்னர்ஷிப்பால் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் ஒருநாள் போட்டியை வெற்றி பெற்றது இந்திய அணி.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக விளாசிய மிச்சல் மார்ஷ் வெறும் 65 பந்துகளில் 81 ரன்கள் அடித்தார். இதில் 5 சிக்சர்கள் 10 பவுண்டரிகள் அடங்கும்.

ஒத்தையா நின்னு கெத்தாக ஜெயிச்சு கொடுத்த கேஎல் ராகுல்.. பயம்காட்டிய ஸ்டார்க்கை அடக்கிய ஜடேஜா-கேஎல் ராகுல் ஜோடி.. இந்தியா அபார வெற்றி! 2

ஸ்மித் 22 ரன்கள், இங்கிலிஷ் 26 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க முழுமையாக 50 ஓவர்கள் கூட ஆஸ்திரேலியா அணியால் பிடிக்க முடியவில்லை. 35.4 ஓவர்களில் 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. சிராஜ் மற்றும் முகமது சமி இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கம் முற்றிலும் மோசமாகவே இருந்தது. இஷான் கிஷன் 3 ரன்கள், விராட் கோலி 4 ரன்கள், ஷுப்மன் கில் 20 ரன்கள் மற்றும் சூரியகுமார் டக் அவுட்டாகி வெளியேற, இந்திய அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஒத்தையா நின்னு கெத்தாக ஜெயிச்சு கொடுத்த கேஎல் ராகுல்.. பயம்காட்டிய ஸ்டார்க்கை அடக்கிய ஜடேஜா-கேஎல் ராகுல் ஜோடி.. இந்தியா அபார வெற்றி! 3

கேஎல் ராகுல் 5வது விக்கெட்டுக்கு களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறிதுநேரம் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹர்திக் பாண்டியா 31 பந்துகளில் 25 ரன்கள் அடித்து அவுட் ஆனார். 83 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் இருந்த இந்திய அணிக்கு, பின்னர் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா இருவரும் ஆஸ்திரேலிய அணி பவுலர்கள் தாக்குதலை சிறப்பாக எதிர்கொண்டு நீண்ட பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

பொறுப்புடன் விளையாடி வந்த கேஎல் ராகுல் முக்கியமான கட்டத்தில் அரைசதம் அடித்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜடேஜா 45 ரன்கள், கேஎல் ராகுல் 91 பந்துகளில் 75 ரன்கள் அடித்தனர். மிட்ச்சல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளும் ஸ்டாயினிஸ் இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

ஒத்தையா நின்னு கெத்தாக ஜெயிச்சு கொடுத்த கேஎல் ராகுல்.. பயம்காட்டிய ஸ்டார்க்கை அடக்கிய ஜடேஜா-கேஎல் ராகுல் ஜோடி.. இந்தியா அபார வெற்றி! 4

ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது இரண்டாவது ஒருநாள் போட்டி வருகிற 19ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடக்கிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *