முதல் ஒருநாள் போட்டி: உலககோப்பை சாம்பியன் இங்கிலாந்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த அயர்லாந்து! 1

சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணியை இங்கிலாந்து அணி எளிதில் வீழ்த்தியது.அயர்லாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

முதல் ஒருநாள் போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்துஅணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, அயர்லாந்து அணி களமிறங்கியது. 28 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அந்த அணியின் கேம்பர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 59 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.கடைசி கட்டத்தில் மெக் பிரின் 40 ரன்கள் சேர்த்தார்.

முதல் ஒருநாள் போட்டி: உலககோப்பை சாம்பியன் இங்கிலாந்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த அயர்லாந்து! 2

கெவின் ஓ பிரையன் 22 ரன்களை எடுக்க இருவரும் அரைசதக் கூட்டணி அமைத்தனர். ஆண்டி மெக்பிரைன் 40 ரன்களுக்கு அபாரமாக ஆட அயர்லாந்து 79/7 என்ற நிலையிலிருந்து 44.4 ஓவர்களில் 172 ரன்களுக்குச் சுருண்டது.

173 ரன்கள் இலக்கை எதிர்த்து இறங்கிய இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பேர்ஸ்டோ 2 ரன்களுக்குச் சொதப்ப, ஜேம்ஸ் வின்ஸ் மட்டும் பிரமாதமான சில ஷாட்களுடன் 25 ரன்கள் எடுத்து எட்ஜ் ஆகி வெளியேற டாம் பாண்ட்டன் 11 ரன்களில் வெளியேற இங்கிலாந்து 14 ஒவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தாலும் 78 ரன்களை எடுத்திருந்தது.

முதல் ஒருநாள் போட்டி: உலககோப்பை சாம்பியன் இங்கிலாந்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த அயர்லாந்து! 3
SOUTHAMPTON, ENGLAND – JULY 30: Harry Tector of Ireland is bowled by Saqib Mahmood of England during the First One Day International between England and Ireland in the Royal London Series at The Ageas Bowl on July 30, 2020 in Southampton, England. (Photo by Mike Hewitt/Getty Images)

இறுதியில் அயர்லாந்து அணி 44.4 ஓவரில் 172 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து சார்பில் வில்லே 5 விக்கெட்டும், சாகிப் முகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. அந்த அணி முதலில் இருந்தே அடித்து ஆடத் தொடங்கினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் வீழ்ந்தன.

முதல் ஒருநாள் போட்டி: உலககோப்பை சாம்பியன் இங்கிலாந்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த அயர்லாந்து! 4
England’s Sam Billings (L) and England’s Eoin Morgan (R) touch gloves during the first One Day International cricket match between England and Ireland at the Ageas Bowl in Southampton, southwest England on July 30, 2020. (Photo by Adam Davy / POOL / AFP) / RESTRICTED TO EDITORIAL USE. NO ASSOCIATION WITH DIRECT COMPETITOR OF SPONSOR, PARTNER, OR SUPPLIER OF THE ECB (Photo by ADAM DAVY/POOL/AFP via Getty Images)

சாம் பில்லிங்சும், இயன் மார்கனும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சாம் பில்லிங்ஸ் அரை சதமடித்தார். அவர் 67 ரன்னுடனும், இயன் மார்கன் 36 ர்ன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

இறுதியில், இங்கிலாந்து அணி 27.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. வில்லே ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *