இளம் வயதில் மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார் காகிசோ ரபாடா !! 1


பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரபாடா 3 விக்கெட்களை வீழ்த்தினார், இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் சாதனை பட்டியலில் இணைந்தார்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவுத் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி கொண்டு இருக்கிறது இதில் முதலில் பேட்டிங் செய்த சவுத் ஆப்பிரிக்கா அணி பத்து விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 27 ரன்களை எடுத்த நிலையில் 4 விக்கெட்களை கொடுத்து பரிதாப நிலையில் இருந்தது, அதனை தொடர்ந்து அஷ்ரப் மற்றும் ஆலம் இருவரும் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.

இளம் வயதில் மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார் காகிசோ ரபாடா !! 2

ஆலம் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்,மேலும் அஷ்ரம் 64 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் இதனால் பாகிஸ்தான் அணி 378 ரன்கள் எடுத்தது.


இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் தென்ஆப்பிரிக்கா அணி 161 ரன்கள் எடுத்து 3 ரன்கள் முன்னிலையில் உள்ளது சவுத் ஆப்பிரிக்கா அணி சார்பில் மார்க்ரம் 67 ரன்கள் எடுத்தும் வாண்டர் டூசன் 60 ரன்கள் தனது விக்கெட்டை இழக்காமல் களத்தில் உள்ளனர்.

இளம் வயதில் மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார் காகிசோ ரபாடா !! 3


இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரபாடா 3 விக்கெட்களை வீழ்த்தினார் இதன்மூலம் 200 விக்கெட்டுகள் எடுத்த சாதனை படைத்துள்ளார்.இதற்குமுன் இச்சாதனையை சவுத் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த டேல் ஸ்டைன் படைத்துள்ளார்.

உலகின் அதி விரைவாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் ரபாடா மூன்றாவது இடத்தில் உள்ளார் முதல் இரண்டு இடங்களில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த வக்கார் யூனிஸ்,டேல் ஸ்டைன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *