இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற சந்தோசத்தில் பாகிஸ்தான் அணி கொண்டாடி கொண்டிருக்கும் போது, கூடுதல் நேரம் பந்து வீசிய காரணத்திற்காக பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மதுக்கு 20 சதவீதம் மற்றும் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு 10 சதவீதமும் அபராதம் அளிக்க வேண்டும். கார்டிபில் நடந்த வாழ்வா சாவா போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை நசுக்கி வெற்றி பெற்றது பாகிஸ்தான்.
கொடுத்த நேரத்தில் ஒரு ஓவர் குறைவாக வீசியதால் போட்டியின் நடுவர் கிறிஸ் ப்ரோடு அபராதம் விதித்தார்.
இதனால் நடுவர்கள் ப்ருஸ் ஆக்சன்போர்ட் மற்றும் மரைஸ் ஏரஸ்மஸ், மூன்றாவது நடுவர் கிறிஸ் கபானே, நான்காவது நடுவர் இயான் கோல்ட் ஆகியோர் இதனை கூறினர்.
இரண்டாவது முறை கூடுதல் நேரம் எடுத்து பந்து வீசினால், சர்பராஸ் அஹ்மதுக்கு ஒரு போட்டிக்கு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையை நசுக்கியது பாகிஸ்தான்:
முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் விளையாட 3-விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான். முதலில் பந்து வீசிய பாகிஸ்தான் அணி இலங்கை வீரர்களை திணற வைத்து 235-ரன்னுக்கு சுருட்டியது. 236 எடுத்தால் வெற்றி என்றால் எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான், தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது. ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க திண்டாடியது பாகிஸ்தான். 168 ரன்னுக்கு 7 விக்கெடுகளை இழக்க, கேப்டன் அஹ்மதுடன் ஜோடி சேர்ந்து பொறுமையாக விளையாடினார் அமீர். இருவரும் பொறுமையாக விளையாட இலங்கை அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது பாகிஸ்தான்.