தற்போது இங்கிலாந்தில் மினி உலக கோப்பை என அழைக்க படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து கொண்டு வருகிறது. இந்த தொடரில் ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் உள்ள முதல் 8 அணிகள் பங்கேற்றுள்ளது.
இந்த நிலையில் ஜூன் 4ஆம் தேதி அன்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி நடந்தது. இதில், எதிர்பார்த்த படி இந்திய அணி வெற்றி பெற்றது.
அந்த வெற்றிக்கு பிறகு, லண்டனில் விராட் கோலி அடித்தளத்தின் தலைமையில் ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இரவு உணவை வர்ணனையாளர் ஆலன் வில்கின்ஸ் முன்னின்று நடத்தினார். அவர் இந்திய அணி வீரர்களிடம் சில வினாடி வினா போட்டி நடத்தினார். அப்பொழுது, அவர் தல தோனியிடம் சில கேள்விகளை எழுப்பினார்.
முதலில், டக்ஒர்த் லெவிஸ் என்றால் என்ன என்று என கேட்டார். அதற்கு தோனி வட்டி பதிலுடன் வந்தார்.
“இந்த டக்ஒர்த் லெவிஸ் முறை சர்வதேச கிரிக்கெட் வாரியத்துக்கே புரியுதா, எப்படி செயல் படுத்துவது என்று தெரியுமான்னு தெர்ல,” என தோனி பதிலளித்தார்.
நீங்கள் எதிர்கொண்ட வேகமான பந்துவீச்சாளர் யார் என்று கேட்ட போது, பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் தான் என்றார். தோனியின் முதல் வெளிநாட்டு பயணத்தில் 2006-இல் பாகிஸ்தானுடன் விளையாடினார். அந்த போட்டியின் போது அக்தருக்கும் தோனிக்கும் வார்த்தை போர் ஏற்பட்டது. அந்த போட்டியில் தோனி 148 ரன் அடித்து, இந்தியாவை தோல்வியில் இருந்து காப்பாத்தினார்.
“நான் எதிர்கொண்ட வேகப்பந்து வீச்சாளர் யார் என்று சொல்ல வேண்டும் என்றால், அது எளிது,, அதுடைய பதில் பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் தான்,” என்று தோனி கூறினார்.
ஜூன் 8-ஆம் தேதி அன்று இலங்கை அணியிடம் இந்திய அணி மோதுகிறது.