இந்திய அணி முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கும் போது, ரவீந்திர ஜடேஜா உணர்ச்சியில் மிதந்தார்.
இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி தற்போது இந்தியாவில் கர்பமாக உள்ளார்.ஆனால், குடும்பத்தை விட நாட்டுக்காக உழைக்க அவர் இங்கிலாந்து வந்துள்ளார். இங்கிலாந்துக்கு வந்தது மட்டும் இல்லாமல், பாகிஸ்தானுடன் சிறப்பாக விளையாடினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 8 ஓவர் வீசிய ஜடேஜா 43 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்ததுதான், முக்கியமான ரன்-அவுட் செய்தார். அந்த போட்டி முடிந்ததும் தன் மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து அவர் மனைவியின் நிலைமையை விசாரித்தார் ஜடேஜா. பிறகு, அடுத்து வரும் போட்டிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜடேஜாவின் மனைவி.
“இதே போல் அவர் அடுத்து வரும் போட்டிகளில் நன்றாக விளையாடவேண்டும் என ஆண்டவனிடம் வேண்டுகிறேன்,” என ஜடேஜாவின்
இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தானை 124 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய இந்திய அணி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் அரைசதம் அடிக்க இந்திய அணி 48 ஓவரில் 319 ரன் அடித்தது.
மழை அடிக்கடி அடிக்கடி குறிக்கிட்டதால், பாகிஸ்தான் அணிக்கு 41 ஓவரில் 289 ரன் இலக்காக கொடுத்தார்கள். இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 164 ரன்னுக்கு 9 விக்கெட்டை இழந்து தோல்வி அடைந்தது. அடுத்த போட்டியில் ஜூன் 8ஆம் தேதி இலங்கை அணியை எதிர்கொள்கிறது இந்தியா.