இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை. அந்த போட்டியின் போது தனுஷ்கா குணதிலகா மற்றும் குஷால் மெண்டிஸ் ஜோடி சிறப்பாக விளையாடி இந்திய அணியின் பந்துவீச்சை பதம் பார்த்து, வெற்றிக்காக போராடினர். இந்த ஜோடியை பிரித்தால் தான் இந்திய அணிக்கு வெற்றிக்கு வாய்ப்பு இருக்கும் என்ற நிலையில், தல தோனி அந்த ஜோடியை பிரித்தார்.
322 ரன் இலக்கை நோக்கி பயணம் செய்த இலங்கை அணியின் தொடக்கவீரர் டிக்கவெல்லா 7 ரன்னில் வெளியேறினார். ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த குணதிலகா மற்றும் குஷால் மெண்டிஸ் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்தனர். இந்த ஜோடி பிரிக்க எந்த இந்திய பந்துவீச்சாளர்களாலும் முடியவில்லை. ஜோடியை பிரிக்க கேப்டன் கோலியும் முயற்சித்தார், ஆனால், முடியவில்லை. ஆனால், அந்த ஜோடியை அசால்டாக தோனி பிரித்தார்.
28வது ஓவரில் அந்த ஜோடி 159 ரன் சேர்த்த நிலையில், குணதிலகா பந்தை அடித்தார். முதல் ரன் ஓடி முடித்த பிறகு, இரண்டாவது ரன்னுக்கு குஷால் மெண்டிஸ் அழைத்தார், இதனால் குணதிலகா இரண்டாவது ரன்னுக்கு ஓடினார். ஆனால், உமேஷ் யாதவ் பந்தை வேகமாக தோனியிடம் அடிக்க, மீதம் உள்ள வேலையை தோனி பார்த்து கொண்டார்.
அந்த வீடியோவை இங்கே பாருங்கள்: