2018ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி !! 1
30th December 2018, Melbourne Cricket Ground, Melbourne, Australia; International Test Cricket, Australia versus India, third test, day five; India players celebrate the final wicket that gave India the win by 137 runs (photo by Morgan Hancock/Action Plus via Getty Images)

2018ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி

2018ம் ஆண்டை இந்திய அணி தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருடன் தொடங்கியது. ஆண்டின் முடிவில் தற்போது ஆஸ்திரேலியாவுடன் ஆடிவருகிறது. இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இந்திய அணிக்கு சிறப்பானதாக இல்லை. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய வெளிநாட்டு தொடர்களில் தோல்வியை தழுவியது. வெஸ்ட் இண்டீஸ் தொடரையும், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியையும் வென்ற இந்திய அணி, தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடிவருகிறது.

2018ம் ஆண்டை பொறுத்தமட்டில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டி, பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் ஆகியவை மிகவும் பரபரப்பான போட்டிகளாக அமைந்தன.

2018ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி !! 2

வழக்கம்போலவே இந்த ஆண்டும் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்கிறார். அதேபோல இந்த ஆண்டில் தென்னாப்பிரிக்க தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பும்ரா, அறிமுக ஆண்டிலேயே பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இப்படியாக இந்த ஆண்டு நிறைவடையும் நிலையில்,2018ம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் அணி குறித்து இங்கு பார்ப்போம்.

டாம் லாதம்;

நியூசிலாந்து அணியின் துவக்க வீரரான டாம் லாதம் 2018ம் ஆண்டில் 658 ரன்கள் குவித்து 59.81 சராசரி வைத்துள்ளார்.

2018ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி !! 3

திமுத் கருணார்த்தானே;

இலங்கை கிரிக்கெட் அணியின் இடது கை ஆட்டக்காரரான இவர், 2018ம் ஆண்டில் 743 ரன்கள் எடுத்துள்ளார். இவரின் சராசரி 46.43 ஆகும். இவரையே 2018ம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் அணியின் துவக்க வீரராக தேர்வு செய்துள்ளோம்.

2018ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி !! 4

கேன் வில்லியம்சன்;

நியூசிலாந்து அணியின் கேப்டனும், நிகழ்கால கிரிக்கெட் உலகின் மிகப்பெரும் ஜாம்பவனாகவும் திகழ்ந்து வரும் கேன் வில்லியம்சன் இந்த ஆண்டில் நடைபெற்ற பல தொடர்களில் மிக அற்புதமாக செயல்பட்டுள்ளார். கேன் வில்லியம்சன் 651 ரன்களுடன் 2018ம் ஆண்டை நிறைவு செய்துள்ளார். இவரின் சராசரி 60 ரன்களாகும்.

2018ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி !! 5

விராட் கோஹ்லி (கேப்டன்);

2018ம் ஆண்டில் விராட் கோஹ்லியின் ஆட்டத்தை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. 2018ம் ஆண்டில் 1322 ரன்கள் குவித்து 55.-08 சராசரி வைத்திருக்கும் விராட் கோஹ்லியே இந்த அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2018ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி !! 6

டிவில்லியர்ஸ்;

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், இவருக்கு மாற்று வீரர் இந்த ஆண்டில் கிடைக்கவில்லை.

2018ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி !! 7
160114C_SunTesSer_SAENG_Day1_SS

ஜாஸ் பட்லர்;

கடந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து அபாரமான பார்மில் இருந்து வரும் ஜாஸ் பட்லர் 2018ம் ஆண்டில் மொத்தம் 760 ரன்கள் குவித்து 44 ரன்களை சராசரியாக வைத்துள்ளார்.

2018ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி !! 8

ஹோல்டர்;

விண்டீஸ் அணியின் கேப்டனான ஹோல்டர் இந்த ஆண்டில் 336 ரன்கள் குவித்து 37.33 ரன்களை தனது சராசரியாக வைத்துள்ளார்.

2018ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி !! 9

பேட் கம்மின்ஸ்;

ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான பேட் கம்மின்ஸ் இந்த ஆண்டில் நடைபெற்ற அனைத்து தொடர்களிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றால் மிகையாகாது.

2018ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி !! 10
Photo by Lee Warren / Gallo Images

நாதன் லயோன்;

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயோன், இந்த ஆண்டில் மொத்தம் 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2018ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி !! 11

முகமது அப்பாஸ்;

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த முகமது அப்பாஸ் இந்த ஆண்டில் தான் விளையாடிய 7 போட்டிகளில் மொத்தம் 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2018ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி !! 12

ஜஸ்ப்ரிட் பும்ராஹ்;

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகனான பும்ராஹ், இந்த ஆண்டில் தான் விளையாடிய 9 போட்டிகளில் மொத்தம் 45 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

2018ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி !! 13

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *