2019 உலக கோப்பை தொடர் குறித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து மனம் திறந்து பேசிய அம்பத்தி ராயுடு !! 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் அம்பத்தி ராயுடு 2019 உலக கோப்பை தொடர் குறித்து சென்னை அணி குறித்தும் பத்திரிகையாளர்களின் சந்தித்திப்பின் பேசியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்ட அம்பத்தி ராயுடு மிக சிறந்த முறையில் விளையாடி பலமுறை சென்னை அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.

சென்னை அணியிலும், ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம் பிடித்திருக்கும் அம்பத்தி ராயுடு 2022 ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியில் தக்க வைக்கப் படவில்லை இருந்தபோதும் இவரை ஏலத்தில் சென்னை அணி மீண்டும் தனது அணியில் இணைத்துக் கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

2019 உலக கோப்பை தொடர் குறித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து மனம் திறந்து பேசிய அம்பத்தி ராயுடு !! 2

2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் மிக சிறப்பான பார்மில் இருந்த அம்பத்தி ராயுடுவை இந்திய அணி தேர்ந்தெடுக்கவில்லை, இவருக்கு பதிலாக 3d விஜய் சங்கரை இந்திய அணி தேர்ந்தெடுத்தது இதனால் விரக்தி அடைந்த அம்பத்தி ராயுடு அனைத்து விதமான தொடரிலிருந்து ஓய்வை அறிவிக்கிறேன் என்று தெரிவித்தார். பின் மீண்டும் தனது ஓய்வை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

இன்னிலையில் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது 2019 உலகக் கோப்பை தொடர் குறித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து தனது கருத்தை பேசியுள்ளார்.

2019 உலக கோப்பை தொடர் குறித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து மனம் திறந்து பேசிய அம்பத்தி ராயுடு !! 3

அதில் பேசிய அவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் இடம்பெறாதது மிகவும் ஏமாற்றத்தை அளித்தது, இதனால் நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக என்னை தயார்படுத்திக் கொண்டேன், சென்னை அணிதான் நான் மீண்டு வருவதற்கு மிகப் பெரும் உதவியாக இருந்தது, நான் சென்னை அணிக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்று அம்பத்தி ராயுடு பேசியுள்ளார்.

மேலும் , தற்பொழுது நான் நல்ல பார்மிலும் உடற்தகுதியோடும் இருக்கிறேன், அடுத்த மூன்று வருடங்கள் விளையாடுவதற்காக நான் தற்பொழுது தயார் நிலையில் இருக்கிறேன், மேலும் சமீபமாக நடந்து முடிந்த விஜய் ஹசாரே போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன்மூலம் தற்போது நான் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன் என்று அம்பத்தி ராயுடு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *