14வது ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 11ஆம் தேதி நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 13வது ஐபிஎல் தொடரா கொரோனா வைரஸ் காரணமாக செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றியது. தற்போது 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெறும் 14 வது ஐபிஎல் சீசன் இந்தியாவிலயே நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 2021 ஆண்டு நடைபெறும் 14 வது ஐபிஎல் சீசனில் 8 அணிகள் மட்டுமே விளையாடும். 10 அணிகள் கொண்ட ஐபிஎல் தொடர் 2022ல் தான் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி இந்த ஐபிஎல் தொடரை மிகப்பெரிய அளவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஐபிஎல் சீசனுக்கான அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே நடைபெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரானா வைரஸ் காரணம் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. வருகின்ற பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெற இருக்கும் பிசிசிஐ கூட்டத்தில் ஐபிஎல் ஏலத்திற்கான தேதி குறித்து முடிவெடுக்கப்படும் என்ற நிலையில் தற்போது பிப்ரவரி 11ஆம் தேதி ஏலத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கான ட்ரான்ஸ்பர் டிரடிங் விண்டோ தற்போது திறக்கப்பட்டுள்ளது. ஜனவரி 21ஆம் தேதி வரை இந்த விண்டோ திறக்கப்பட்டிருக்கும் அதற்குள் அணிகள் எந்த வீரர்களை வெளியேற்றலாம் என்ற முடிவை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ட்ரான்ஸ்லட் டிரடிங் விண்டோ மூலம் ஒரு அணியில் இருக்கும் வீரர்களை வெளியேற்றவும், மற்ற அணிகளுடன் வீரர்களை மாற்றிக் கொள்ளவும் முடியும். இந்த 15 நாட்களில் பல வீரர்கள் பல அணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அதேபோல் ஒரு அணியில் இருக்கும் வீரர்கள் வேறொரு அணிக்கு மாற்றப்படுவார்கள்.