தல தோனி கிட்ட இருந்து நான் கத்துக்கிட்ட விசயம் இது தான்; டூவைன் ப்ரெடோரியஸ் ஓபன் டாக் !! 1

தோனியின் மதிப்பு என்னவென்பதை சென்னை அணியில் இருந்தபோது தான் புரிந்து கொண்டேன்  என்று தென் ஆப்ரிக்கா அணி ஆல்ரவுண்டர் டுவைன் பிராடோரியஸ் தெரிவித்துள்ளார்.

மிகவும் கோலாகலமாக நடைபெற்ற 2022 ஐபிஎல் தொடர் இனிதே நிறைவு பெற்றது, இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை,மும்பை உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய நிலையில், 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.தல தோனி கிட்ட இருந்து நான் கத்துக்கிட்ட விசயம் இது தான்; டூவைன் ப்ரெடோரியஸ் ஓபன் டாக் !! 2

இந்தத் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளில் விளையாடிய இளம் வீரர்கள் பலரும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி கிரிக்கெட் உலகுக்கு தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.

அப்படி சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் அவர்களுடைய கிரிக்கெட் கரியர் உதவும்படியும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுநர்கள் பாராட்டுகளையும் சரியான ஆலோசனைகளையும் கொடுத்து வருகின்றனர்.மேலும் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் தங்களின் சிறப்பான அட்டத்திற்கான காரணத்தையும் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

அந்த வகையில் 2022 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு அறிமுகமான சவுத் ஆப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிரெடோரியஸ், சென்னை அணியின் கேப்டன் தோனி தனக்கு அமைதியாகவும், நம்பிக்கையுடன் இருப்பது எப்படி என்பதை புரிய வைத்துள்ளார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

தல தோனி கிட்ட இருந்து நான் கத்துக்கிட்ட விசயம் இது தான்; டூவைன் ப்ரெடோரியஸ் ஓபன் டாக் !! 3

இதுகுறித்து பிரெடோரியஸ் பேசுகையில், “என்னுடைய முதல் ஐபிஎல் போட்டியை விளையாடியது நல்ல அனுபவமாக இருந்தது,, சென்னை போன்ற ஒரு அணியில் விளையாட வேண்டும் என்பது, என்னுடைய தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையின் வரிசையில் ஒன்றாகும் (bucket list), அந்த அணியில் இருந்த ஒவ்வொரு நிகழ்வையும் நான் ரசித்தேன், அதில் நிறைய பொறுப்புள்ள வீரர்கள் உள்ளனர். மேலும் டோனி தலைமையின்கீழ் விளையாடியது மற்றும் பேட்டிங் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது , அவருடைய நாட்டிற்கு செய்த சாதனை மற்றும் பிராண்ட் வேல்யூ(Brand Value) அவர் எவ்வளவு பெரிய நபர் என்பதை உணர்த்தியது, அவருடன் நானும் இருந்தது மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். மேலும் நான் தோனியிடம் இருந்து கிரீசில் எப்படி நிதானமாக இருப்பது என்பதை கற்றுக்கொண்டேன், அவர் எப்படி தன்மீதிருக்கும் மற்றும் பந்து வீச்சாளர்களின் மீது இருக்கும் நெருக்கடியை போக்குகிறார் என்பது மிகவும் ஆச்சரியமாக இருந்தது, அவர் எனக்கு டெத் ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் எப்படி நெருக்கடியை உணர்கிறார்கள் என்பதை புரிய வைத்தார், அவர் எப்பவும் மனதை புத்துணர்வுடன் வைத்துக்கொள்வார் மேலும் எந்த ஒரு ஆரவாரமும் இருக்காது, தன்னால் எதையும் செய்துவிட முடியும் என்று நம்பிக்கையோடு இருப்பார். நிச்சயம் அவரிடமிருந்து நான் அமைதி மற்றும் தன்னம்பிக்கையை கற்றுக்கொண்டு அதை என்னுடைய போட்டியில் பயன்படுத்துவேன் என்று பிரெடோரியஸ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *