விராட் கோலி

2022ஆம் ஆண்டுக்கான சிறந்து டி20 அணியை அறிவித்துள்ளது ஐசிசி.

டி20 உலகக்கோப்பை, ஆசியகோப்பை உள்ளிட்ட பல டி20 தொடர்களில் 2022 ஆம் ஆண்டு அபாரமாக செயல்பட்ட 11 வீரர்களை கொண்ட சிறந்த டி20 அணியை தேர்வு செய்துள்ளது ஐசிசி.

1. ஜோஸ் பட்லர்

இந்த அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக டி20 உலககோப்பையை வென்ற ஜோஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவர் 2022 ஆம் ஆண்டு 15 போட்டிகளில் 462 ரன்களை 160+ ஸ்ட்ரைட்டில் விளாசியுள்ளார். நடந்து முடிந்த டி20 உலககோப்பையில் இங்கிலாந்து அணிகாக அதிக ரன்கள் அடித்தவராகவும் இவர் இருந்தார். 6 போட்டிகளில் 225 ரன்கள் அடித்திருந்தார்

ஜோஸ் பட்லர்

2. முகமது ரிஸ்வான்

2021ஆம் ஆண்டு விட்டுச்சென்ற பார்மை 2022ஆம் ஆண்டிலும் தொடர்ந்தார். 996 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்தவர்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் பத்து அரைசதங்கள் அடித்துள்ளார். டி20 உலககோப்பையில் 175 ரன்கள் அடித்து பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் அடித்தவராகவும் இருந்ததால் இந்த அணியில் இடம்பெற்று இருக்கிறார்.

3. விராட் கோலி

ஆசியக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் விளாசி, இரண்டரை வருட சதத்தின் தாகத்தை தீர்த்துக்கொண்டார் விராட் கோலி. ஆசியகோப்பையில் அதிக ரன்கள் அடித்தவர்களில் இரண்டாவது இடத்தில் இருந்தார் 5 போட்டிகளில் 276 ரன்கள் விலாசினார.

இந்த பார்மை டி20 உலககோப்பையிலும் தொடர்ந்தார். டி20 உலககோப்பையில் ஆறு போட்டிகளில் நான்கு அரைசதங்கள் உட்பட 296 ரன்கள் விளாசி அதிக ரன்கள் அடித்தவராகவும் இருந்தார்.

4. சூரியகுமார் யாதவ்

சூரியகுமார் யாதவிற்கு 2022 ஆம் ஆண்டு கனவு ஆண்டாக அமைந்திருக்கிறது. டி20 போட்டிகளில் 1164 ரன்கள் விளாசினார். 188 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். இதில் ஒன்பது அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் அடங்கும். அதிக ரன்கள் அடித்தவர்களில் முதலிடத்தில் இருந்தார்.

டி20 உலககோப்பையிலும் இந்த பார்மை தொடர்ந்து, மூன்று அரைசதங்கள் உட்பட 239 ரன்கள் விளாசினார். டி20 தரவரிசையில் முதல் இடத்திலும் இருக்கிறார்.

சூர்யகுமார் யாதவ்

5. கிளென் பிலிப்ஸ்

பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்று விதமாகவும் மிகச்சிறப்பாக நியூசிலாந்து அணிக்காக செயல்பட்டு வரும் பிலிப்ஸ் கடந்த ஆண்டு 716 ரன்களை 21 போட்டிகளில் அடித்திருக்கிறார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 157 ஆகும். பல போட்டிகளில் பினிஷர் ரொலில் விளையாடி முக்கிய வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார் என்பதால் இந்த அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

5. சிக்கந்தர் ராசா

ஜிம்பாவே அணியின் தூணாக விளங்கிவரும் சிக்கந்தர் ராசா, மிகச்சிறந்த ஆல்ரவுண்டருக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார். கடந்த ஆண்டு பேட்டிங்கில் 735 ரன்கள் அடித்து இருந்தார். பவுலிங்கில் 25 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இவரது எக்கனாமி வெறும் 6.13 மட்டுமே.

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியை ஜிம்பாப்வே அணி வீழ்த்தி வரலாறு படைத்தது. இந்த வெற்றிக்கு சிக்கந்தர் ராசாவின் பங்களிப்பு இன்றியமையாதது.

7. ஹர்திக் பாண்டியா

காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பிடிக்க திணறி வந்த ஹர்திக் பாண்டியாவிற்கு 2022 ஆம் ஆண்டு கனவு ஆண்டாகவே அமைந்தது. ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய கையோடு இந்திய அணிக்கு திரும்பினார். கடந்த ஆண்டு 607 ரன்கள் மற்றும் 20 விக்கெட்டுகளை கைப்பற்றி மிக சிறந்த பங்களிப்பை இந்திய அணிக்கு கீழ் வரிசையில் கொடுத்து வந்திருக்கிறார்.

இந்திய டி20 அணியிலிருந்து ஒதுக்கப்பட்ட விராட் கோலிக்கு உரிய அங்கீகாரம் கொடுத்த ஐசிசி; 2022ம் ஆண்டுக்கான சிறந்த டி20 அணியை அறிவித்தது! 1

8. சாம் கர்ரன்

டி20 உலககோப்பையில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை கைப்பற்றுவதற்கு மிக முக்கிய பங்காற்றியவர் ஷாம் கர்ரன். இந்த உலககோப்பையில் 6 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு பேட்டிங்கிலும் நன்றாக செயல்பட்டார். ஆகையால் தொடர் நாயகன் விருது பெற்றார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது இவரது சிறந்த பந்துவீச்சாகவும் இருக்கிறது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெறும் 12 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

9. வணிந்து ஹசரங்கா

இலங்கை அணி ஆசிய கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர் வணிந்து ஹசரங்கா. ஆறு போட்டிகளில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல் பேட்டிங்கிலும் நன்றாக பங்காற்றினார்.

டி20 உலககோப்பையில் குவாலிபயர் சுற்று உட்பட 8 போட்டிகளில் 15 விக்கெட் கைப்பற்றினார். இலங்கை அணி உலககோப்பைக்கு தகுதி பெறுவதற்கும் இவர் தான் முக்கிய காரணம்.

11. ஹாரிஸ் ரவூப்

2022 ஆம் ஆண்டு ஹாரிஸ் ரவூப் இருந்த ஃபார்மை பாகிஸ்தான் அணி நன்றாக பயன்படுத்திக் கொண்டது. ஆசியக்கோப்பை தொடர் மற்றும் டி20 உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறுவதற்கு இவரது பங்களிப்பு இன்றியமையாதது.

கடந்த ஆண்டு 31 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வேறு எந்த பாகிஸ்தான் வீரரும் இவருக்கு இணையாக விக்கெட்டுகளில் பங்களிப்பை கொடுக்கவில்லை.

ஹாரிஸ் ரவூஃப்

11. ஜோஷ் லிட்டில்

கத்துக்குட்டி அணியாக பார்க்கப்படும் அயர்லாந்து அணியில் இருந்துகொண்டு தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் லிட்டில், 2022 ஆம் ஆண்டு அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

ஒட்டு மொத்தமாக 39 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக டி20 உலக கோப்பையில் மட்டும் 11 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டி20 உலககோப்பையில் அயர்லாந்து அணி முதல்முறையாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாறு படைக்க இவரது பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடதக்கது.

2022ம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த டி20 அணி:

ஜோஸ் பட்லர்(கேப்டன்/கீப்பர்) முகமது ரிஸ்வான், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், கிளென் பிலிப்ஸ், சிக்கந்தர் ராசா, ஹர்திக் பாண்டியா, ஷாம் கர்ரன், வணிந்து ஹசரங்கா,  ஹரிஷ் ரவூப், ஜோஸ் லிட்டில்.

இந்திய டி20 அணியிலிருந்து ஒதுக்கப்பட்ட விராட் கோலிக்கு உரிய அங்கீகாரம் கொடுத்த ஐசிசி; 2022ம் ஆண்டுக்கான சிறந்த டி20 அணியை அறிவித்தது! 2

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *