2வது டி20 போட்டியில் களம் இறங்கப் போகும் இந்திய அணி இதுதான் !காயம் காரணமாக மேலும் ஒரு வீரர் விலகல் !
முதல் டி20 போட்டியில் கே.எல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ராகுல் அரை சதம் அடித்திருந்தார். ஷிகர் தவான் ஒரு ரன்னில் வெளியேறினார்.
இருந்தாலும் ஐபிஎல் தொடரில் இரண்டு சதங்கள் அடித்திருந்தால் ஷிகர் தவான் இதை வைத்து தான் அவர் மீண்டும் இந்திய அணியில் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மீண்டும் இந்த இருவரும் தான் தொடக்க வீரர்களாக களம் இறக்கப் போகிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

அப்படியே வேறு யாராவது துவக்க வீரராக களமிறங்க வேண்டும் எனில் சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட்டார். மூன்றாவது இடத்திற்கு விராட் கோலி 4-வது இடத்திற்கு மணீஷ் பாண்டேவும் இறங்குவார்கள். ஒருவேளை சஞ்சு சாம்சன் துவக்க வீரராக களம் இறங்கி விட்டால் 5வது இடத்தில் கே.எல் ராகுல் 6வது இடத்தில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் விளையாடுவார்கள்.
பந்துவீச்சாளர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாஹல் ஆகியோர் களமிறக்கப்படுவார்கள். வேகப்பந்து வீச்சாளராக தங்கராசு நடராஜன், தீபக் சாஹர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விளையாட பெரிய வாய்ப்பு இருக்கிறது. கண்டிப்பாக தங்கராசு நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
2வது டி20 போட்டியில் விளையாடும் XI வீரர்கள் :
ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விராட் கோலி , மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ஹார்டிக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், டி நடராஜன், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா
