2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வினை புறக்கணித்தது
தனது அபாரமான சுழற்பந்து வீச்சு மூலம் பல முறை இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ள அஸ்வினை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி களமிறக்காமல் ஓரம் கட்டினார்.
அஸ்வினுக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு அளியுங்கள் என்று பலரும் கேப்டன் விராட் கோலிக்கு அறிவுரை வழங்கியபொழுதும், இந்திய அணி கேப்டன் விராட்கோலி அதையெல்லாம் தனது காதில் போட்டுக்கொள்ளாமல் தன்னுடைய பழைய திட்டத்தையே செயல்படுத்தியது அந்த சமயத்தில் மிகப் பெரும் சர்ச்சையாக இருந்தது. கிட்டத்தட்ட விராட் கோலியால் அஸ்வின் புறக்கணிக்கப் படுகிறார் என்று பேசும் அளவிற்கு மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
