முகேஷ் குமார்.
ரஞ்சிக் கோப்பை, துலிப் டிராபி, இந்திய -A போன்ற தொடர்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியின் ஸ்டான்-பை வீரராக திகழ்ந்த பெங்கால் வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் குமாருக்கு டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என பெரும்பாலானவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முகமத் சிராஜ், முகமது சமி, உமேஷ் யாதவ போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் மிக மோசமாக விளையாடியதன் காரணமாக எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவருக்கு வாய்ப்பளித்து பரிசோதித்து பார்க்கலாம் என முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.