2022 ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி டைட்டில் பட்டத்தை வெற்றி பெற்று அசத்தியது.
இந்த நிலையில் 2023 ஐபிஎல் தொடரிலும் எப்படியாவது டைட்டில் பட்டதை வெல்ல வேண்டும் என்ற திட்டியிருக்கும் குஜராத் அணி எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் தன்னுடைய அணியிலிருந்து சில வீரர்களை விடுவித்துவிட்டு சிறந்த வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான திட்டத்தில் உள்ளது.
இந்த நிலையில் குஜராத் அணி விடுவிக்கும் வீரர்களில் இந்த 3 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணியில் இணைத்துக் கொள்வதற்கான திட்டம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்படி சென்னை அணி தனது அணியில் இணைக்க திட்டமிட்டிருக்கும் 3 குஜராத் வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
ராகுல் திவாட்டிய.
2022 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒருவராக கருதப்படும் ஆல்ரவுண்டர் ராகுல் திவாட்டியா இந்த தொடரில் மொத்தம் 16 போட்டிகளில் பங்கேற்று 216 ரன்களை அடித்துள்ளார்.
இருந்த போதும் 2023 மினி ஏலத்தில் திவாட்டியாவை அணியிலிருந்து நீக்கிவிட்டு இவரை விட சிறந்த ஆல்ரவுண்டரை அணியில் இணைப்பதற்கான திட்டத்தை குஜராத் அணி வைத்துள்ளது. ஒருவேளை இவர் குஜராத் அணியிலிருந்து நீக்கப்பட்டால் எப்படியாவது இவரை தனது அணியில் இணைக்க வேண்டும் என்று சென்னை அணி திட்டமிட்டுள்ளது.