யாருமே கண்டுக்க மாட்டாங்க… ஐபிஎல் ஏலத்தில் விலை போக வாய்ப்பு இல்லாத மூன்று இந்திய வீரர்கள்
2023 மினி ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படாமல் போவதற்கு வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து காண்போம்.
2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் சில தினங்களில் நடைபெற இருப்பதால், ஒவ்வொரு அணியும் தனக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுக்கும் பட்டியலை தயார் செய்து வருகிறது.
இதனால் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் எந்த அணிக்கு எந்த வீரர் தேவைப்படுவார்.? எந்த அணி நட்சத்திர வீரர்களை தேர்ந்தெடுக்கும் என்பது போன்ற பல்வேறு சுவாரசியமான விஷயங்களை தெரியப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் 2023 ஐபிஎல் தொடர் ஏழத்தில் இந்த மூன்று வீரர்கள் நிராகரிக்கப்படுவார்கள் என்று பேசப்பட்டு வருகிறது.
அப்படிப்பட்ட மூன்று வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.
கருன் நாயர்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முச்சதம் அடித்த வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணி சீனியர் வீரர் கருன் நாயர், சர்வதேச இந்திய அணி பெரிய வீரராக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்ப்பெல்லாம் நடந்து விடாது என்பது போல், கருன் நாயர் இந்திய அணியிலிருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டார். இருந்த போதும் எப்படியாவது தனக்கான அங்கீகாரத்தை பெற வேண்டும், என பல்வேறு வகையிலும் முயற்சி செய்து வரும் கருன் நாயர் 2023 ஐபிஎல் தொடரில் தன்னுடைய பெயரை பதிவு செய்துள்ளார். ஆனால் இவரை எந்த அணியும் தேர்வு செய்யாது என்றே பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.