மூன்று இந்திய வீரர்களுக்கு இடம்... 2021ம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்தது ஐசிசி !! 1

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி 2021 ஆம் ஆண்டில் தலைசிறந்த டெஸ்ட் தொடருக்கான ஆடும் லெவனை வெளியிட்டுள்ளது.

சிறப்பாக செயல்படும் வீரர்கள், வீராங்கனைகள் சிறந்த அணி, சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன்கள் என சிறப்பாக செயல்படுபவர்களை புள்ளி மதிப்பெண் அடிப்படையில் வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிடும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 2021 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட டெஸ்ட் வீரர்கள் எல்லாம் தேர்ந்தெடுத்து சிறந்த ஆடும் லெவனை கேன் வில்லியம்சன் தலைமையில் தேர்ந்தெடுத்துள்ளது.

மூன்று இந்திய வீரர்களுக்கு இடம்... 2021ம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்தது ஐசிசி !! 2

இதில் துவக்க வீரர்களாக இலங்கை அணியின் அதிரடி துவக்க வீரர் திமுத் கருணாரத்னே மற்றும் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் தேர்ந்தெடுத்துள்ளது, இந்த இரண்டு வீரர்களுமே கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் 900+ ரன்கள் அடித்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து 3&4 பேட்ஸ்மேன்களாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மார்னஸ் லபுசேன் மற்றும் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தொடருக்கான கேப்டன் ஜோ ரூட் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன இந்த இரண்டு வீரர்களும் டெஸ்ட் தொடருக்கான சிறந்த பேட்ஸ்மேன்கள் என்ற ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் கேன் வில்லியம்சனையும் 6வது இடத்தில் பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் பவாத் ஆலம் மற்றும் 7வது இடத்தில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளது.

மூன்று இந்திய வீரர்களுக்கு இடம்... 2021ம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்தது ஐசிசி !! 3

மேலும் 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடருக்கான ஆடும் லெவனின் ஆல்ரவுண்டர்களாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் அஸ்வின் மற்றும் நியூசிலாந்து அணியின் கைல் ஜேமிசன் ஆகிய இருவரையும், இவர்களைத் தொடர்ந்து பந்துவீச்சாளர்களாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி மற்றும் சகீன் அஃப்ரிடி ஆகிய இருவரையும் ஐசிசி தேர்ந்தெடுத்துள்ளது.

 

ஐசிசி தேர்ந்தெடுத்துள்ள 2021 ஆம் ஆண்டில் டெஸ்ட் தொடருக்கான சிறந்த ஆடும் லெவன்.

திமுத் கருணாரத்ன, ரோகித் சர்மா, மார்னஸ் லபுசேன், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் (c), பவாத் ஆலம், ரிஷப் பண்ட், அஸ்வின், கைல் ஜமிசன், ஹசன் அலி, சகீன் அஃப்ரிடி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *