14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசன் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு இருக்கின்றனர்.
முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் மும்பையில் மோதுகிறது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிக போட்டியில் பென்சில் உட்கார வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் இவர்கள் தான் என்று பேசப்படுகிறது.
1.அர்ஜுன் டெண்டுல்கர்

இவர் 2019ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் நெட் பவுலராக செயல்பட்டு வருகிறார். இவர் இதில் சிறப்பாக வீசியதால் இந்தாண்டு ஏலத்தில் மும்பை அணி எடுத்திருக்கிறது. ஆனால், பலர் சச்சினின் பையன் என்பதற்காகவே இவரை மும்பை அணி தேர்வு செய்தது என்று கூறி வருகின்றனர். இவர் இந்த ஐபிஎல் சீசனில் ஓரிரு போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. ஆதித்யா தாரே

இவர் ஐபிஎல் தொடரில் 2015 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். தன் சொதப்பலான ஆட்டத்தால் வெளியேற்றப்பட்டு ஹைதராபாத், டெல்லி போன்ற அணிகளில் இடம்பெற்றார். தற்போது மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்திருக்கிறார். இவர் இதுவரை 35 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு அரைசதம் விளாசி 339 ரன்கள் குவித்து ஆவரேஜ் 14.12 பெற்றிருப்பதால் இவரால் எந்தொரு அணியிலும் தொடர்ந்து விளையாட முடியவில்லை. இந்தாண்டு ஐபிஎல்லிலும் இவர் ஒரு சில போட்டிகளில் மட்டும் பங்குபெற்று மற்ற போட்டியில் எல்லாம் பென்சில் உட்கார்ந்து வருவார்.
3. தவால் குல்கர்னி

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளில் விளையாடியுள்ள இவர் சிறந்த ஸ்விங் பந்துவீச்சாளர். இவர் பந்தை துல்லியமாக ஸ்விங் செய்து விக்கெட்களை வீழத்தக்கூடியவர். ஆனால் இவரால் டெத் ஓவர்கள் போட முடியவில்லை. இதுதான் இவரது மிகப்பெரிய பிரச்சனை. இதனால் இவர் பல போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதுவரை 91 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 86 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். 8.26 எக்னாமி ரேட் பெற்று இருக்கிறார்.