2022 ஐபிஎல் தொடரில் முதல் 4 போட்டியில் மூன்றில் வெற்றியுடன் தொடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து தோல்வியைத் தழுவி சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.
இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக துவக்க வீரர்களும், டெத் ஓவர் பந்துவீச்சில் தடுமாற்றமும் தான் என கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது அணியில் மூன்று மாற்றங்களை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அப்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கழட்டிவிட திட்டமிட்டிருக்கும் 3 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
ஆரோன் பின்ச்
ஆஸ்திரேலிய அணியின் லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கான கேப்டன் ஆரோன் பின்ச் ஐபிஎல் தொடரில் 9 அணிகளில் பங்கேற்ற வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
கடந்த வருட ஐபிஎல் தொடரில் எந்த ஒரு அணிக்கும் தேர்வாகமல் இருந்த இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது அணியில் 1.5 கோடி ஏலத்தில் ஒப்பந்தம் செய்தது, ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தன் மீது வைத்த நம்பிக்கையை இவரால் காப்பாற்ற முடியவில்லை, ஐந்து போட்டிகளில் பங்கேற்ற இவர் (7,58,3,0,14) ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆடும் லெவனிலிருந்து நீக்கியது, மேலும் எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடரில் இவரை அணியிலிருந்து நீக்கி விடலாம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
