அஜிங்கிய ரஹானே
இந்திய அணியின் அனுபவ வீரர் அஜிங்கியா ரஹானே, நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தன்னுடைய முதல் போட்டியிலேயே 34 பந்துகளில் 44 ரன்கள் அடித்து அசத்திய இவர், அடுத்தடுத்த போட்டிகளில் மிகவும் மோசமான ஆட்டத்தை வழக்கம்போல் வெளிப்படுத்தினார்.
இதனால் விரக்தி அடைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரஹானேவை ஆடும் லெவனிலிருந்து நீக்கியது, மேலும் இவரை 2023 ஐபிஎல் தொடரில் தனது அணியிலிருந்து நீக்கிவிடலாம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
