ஐந்து முறை டைடல் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமாக விளையாடி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் அணியாக வெளியேறியது.
இதற்கு முக்கிய காரணம் மும்பை அணியின் பேட்டிங் பந்துவீச்சு மற்றும் அணியின் காம்பினேஷன் என எதுவுமே சரியாக அமையவில்லை என்பதுதான் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் எதிர்வரும் 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எப்படியாவது மீண்டும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக மும்பை அணி தனது அணியில் மூன்று வீரர்களை நீக்கவுள்ளதாக செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டைம் மில்ஸ்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டைம் மில்ஸ் 2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார், முதல் ஐந்து போட்டிகளில் பங்கேற்ற இவருடைய பந்துவீச்சு அந்த அளவிற்கு எடுபடவில்லை.மேலும் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இவரை அடுத்தடுத்த போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி தேர்ந்தெடுக்கவில்லை. மேலும் அடுத்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணியில் சோப்ரா ஆர்ச்சர், இணைய உள்ளதால் இவரை மும்பை இந்தியன்ஸ் அணி நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேபியன் ஆலன்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பேபியன ஆலன் 2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய இவர்,பந்து வீச்சில் அதிக ரன்களை வாரி வழங்கியதால் அதற்கு அடுத்த போட்டியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி இவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.
மேலும் 2023 ஐபிஎல் தொடரில் மும்பை அணியிலிருந்து இவர் நீக்கப் படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மயங்க் மர்கண்டே
லெக் ஸ்பின்னர் மயங்க் மர்கண்டே 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அதன்மூலம் மிகவும் பிரபல்யமான வீரராக அறியப்பட்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இரண்டு வருடம் ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.இருந்தபோதும் 2022 ஐபிஎல் தொடரில் இவர் மீது நம்பிக்கை வைத்து மும்பை இந்தியன்ஸ் அணி தனது அணியில் இணைத்துக் கொண்டது. ஆனால் தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருப்பதால் இவரை 2023 ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி நீக்கிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.