தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியைத் தழுவியதற்கு முக்கிய காரணமாக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாததுதான் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது, மேலும் இதனை தொடர்ந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததால் இந்திய அணியின் அனுபவ வீரர்களாக திகழ்ந்த ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவருக்கும் இனிமேல் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காது என்று பேசப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு வீரர்களுக்கும் இந்திய அணி பல வாய்ப்புகளை கொடுத்தது, ஆனால் இந்த இருவருமே அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை, குறிப்பாக இந்திய அணியின் துடுப்பாட்டக்காரர் புஜாரா கடந்த 18 போட்டிகளில் வெறும் 841 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இனிமேல் புஜாராவிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் புஜாராவிர்க்கு பதில் தகுதியான 3 பேட்ஸ்மேன்கள் குறித்து இங்கு காண்போம்.
ஹனுமா விஹாரி
டெஸ்ட் போட்டிகளுக்கு எப்படி புஜாரா சிறந்த தேர்வாக இருந்தாரோ அதே போன்று டெஸ்ட் போட்டிகளில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட வீரராக ஹனுமா விஹாரியும் திகழ்கிறார். இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் 684 ரன்கள் அடித்து பலரது பாராட்டையும் பெற்ற ஹனுமா விஹாரி டெஸ்ட் தொடரில் தனது அபாரமான பேட்டிங்கின் மூலம் அசத்தி வருகிறார்.
வருங்கால இந்திய அணியின் டெஸ்ட் தொடரில் புஜாராவிற்கு பதில் ஹனுமா விஹாரி ஒரு நல்ல தீர்வாக அமைவார் என்பது குறிப்பிடத்தக்கது.
