ரவிச்சந்திர அஸ்வின்
இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் மிக சிறப்பாக விளையாடக் கூடியவர், உலகக் கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கிய அஸ்வின் தனது அபாரமான பந்து வீச்சின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை திணற வைத்தார். மேலும் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்திய அஸ்வின் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரு நல்ல தீர்வாக அமைவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
நியூ பாலில் மிக சிறந்த முறையில் பந்து வீசக்கூடிய அஸ்வின் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நிச்சயம் இந்திய அணிக்கு உதவிகரமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
