2 – தீபக் சாஹர்;
முகமது ஷமிக்கு அடுத்தபடியாக தீபக் சாஹருக்கே இந்திய அணி அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என தெரிகிறது. கிட்டத்தட்ட 6 மாதங்கள் காயத்தால் அவதிப்பட்டு வந்த தீபக் சாஹர், சமீபத்தில் தான் காயத்தில் இருந்து குணமடைந்து வந்தார். இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 5 டி.20 போட்டிகளில் விளையாடியுள்ள தீபக் சாஹர் அதில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பவர்ப்ளே ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்களிலும் பந்துவீசும் திறனுடைய தீபக் சாஹருக்கு இடம் கொடுத்தால் அவரால் பும்ராஹ் இல்லாத குறையை ஓரளவிற்கு சரி செய்ய முடியும் என தெரிகிறது.