கடந்த வருடம் விராட் கோலிக்கு பதில் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக திகழ்வதற்கு ரோகித் சர்மா தான் தகுதியான நபர் என்று பேசப்பட்ட ஹிட்மேன் ரோகித்சர்மா, நடப்பு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக அணியை வழிநடத்தி வருகிறார்.
பேட்டிங்கில் மோசமாக விளையாடினாலும் கேப்டன்ஷிப்பில் கைகொடுக்கும் ரோஹித் சர்மா , இந்த முறை இரண்டிலுமே மிக மோசமாக செயல்படுகிறார்.இதன் காரணமாக மும்பை அணி தொடர் தோல்வியில் உள்ளது.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவிற்கு பதில் வேறு ஒரு நபரை கேப்டனாக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் கீழ்க்கண்ட மூன்று வீரர்களில் ஒருவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கலாம் என்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.
ஜஸ்பிரித் பும்ரா
அந்த வரிசையில் முதல் வீரராகக் கருதப்படும் நபர் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தான்.
பந்துவீச்சில் அசத்திய திறமை படைத்த இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் நீண்டகாலமாக விளையாடி வருவதால் இவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கலாம் என்று பலரும் மும்பை அணிக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.
