2. கருண் நாயர்
கர்நாடகா அணிக்காக மிடில் ஆர்டர்களில் ஆடும் பேட்ஸ்மேன் இந்திய அணிக்காக சில போட்டிகளையும் ஆடியுள்ளார். குறிப்பாக, விரேந்தர் சேவாக் அடுத்தபடியாக முச்சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இந்த சாதனையை இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்து அணிக்கு எதிராக நிகழ்த்தினார்.
தற்போது இந்தியா ஏ அணியின் கேப்டனாக நின்று அணியை வழிநடத்தி வருகிறார். இவர் வேகப்பந்துச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடுவதால் விரைவில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் இணையலாம் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.
