ஆசிய கோப்பையில் மோசமாக செயல்பட்டு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடத்தை இழந்த மூன்று வீரர்கள் குறித்து காண்போம்.
நடைபெற்று முடிந்த ஆசியக் கோப்பை தொடர், உலகக் கோப்பை தொடர்கான இந்திய அணியை கட்டமைப்பதற்கு முக்கிய வழியாக இருந்தது, இதில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருந்த அதே வேளையில், மோசமாக செயல்பட்ட வீரர்களை அணியில் இருந்து நீக்கியும் உள்ளனர்.
அந்த வகையில் ஆசிய கோப்பையின் மோசமாக செயல்பட்டு உலகக் கோப்பை தொடர்கான இந்திய அணியில் தன்னுடைய இடத்தை இழந்த மூன்று வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.
ஆவேஷ் கான்
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்த ஆவேஷ் கானுக்கு ஆசிய கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் இவர் இந்த தொடரில் பந்துவீச்சில் அரை சதம் அடித்து தனக்கான இடத்தை தானே கெடுத்துக் கொண்டார்.