கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து அணியின் வெற்றிகர கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட் தொடரில் மூன்று விதமான தொடர்களிலும் மிக சிறப்பாக செயல்பட்டு பலமுறை நியூசிலாந்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் எதிர்பாராத தோல்வியை தழுவிய நியூசிலாந்து அணி அதற்குப் பிறகு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் விளங்கினார்.
இந்நிலையில் வருகிற டி20 உலகக் கோப்பை தொடரிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சர்வதேச டி20 தொடரில் கேப்டனாக பொறுப்பேற்ற கேன் வில்லியம்சன் 1383 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
