விராட் கோலி
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் மற்றும் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி டி20 தொடரில் 90 போட்டிகளில் பங்கேற்று 3159 ரன்களை அடித்துள்ளார். மிகவும் அதிரடியாக விளையாடும் கேப்டன் விராட் கோலி இதுவரை டி20 தொடரில் ஒரு முறை கூட சதம் அடிக்கவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியாகவே இருக்கிறது.
இவர் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டு 1502 ரன்களை அடித்து, கேப்டனாக இருந்து அதிகமான ரன்களை சர்வதேச தொடரில் அடித்த வீரர் என்ற பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
