உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது சமி இடம் பெறாததற்கு இந்த மூன்று காரணங்களை கிரிக்கெட் வல்லுனர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.
டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ரெகுலர் வீரராக கருதப்பட்ட முகமது சமி மூன்று விதமான தொடரிலும் சிறப்பாக செயல்படும் திறமை படைத்தவர்.குறிப்பாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். அப்படியிருந்தும் இவரை இந்திய அணி t20 போட்டிகளில் விளையாட விடாமல் வைத்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியமாக உள்ளது.
கடுமையான விமர்சனத்திற்கு பின்பு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உள்ளூர் தொடரில் முகமது சமியின் பெயர் இடம்பெற்றாலும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது சமியின் பெயர் இடம் பெறாதது பெரும்பாலான ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த நிலையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று காரணங்களுக்காக தான் முகமது சமி உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக அதிக t20 போட்டிகளில் விளையாடவில்லை..
கடந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடிய முகமது சாமி அதற்குப்பின் எந்த ஒரு சர்வதேச டி20 போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடவில்லை.
கடைசியாக ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமி சர்வதேச இந்திய அணிக்காக அதிக அளவில் டி20 போட்டியில் விளையாடவில்லை என்பதற்காக நீக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.