தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி, கடந்த 7 வருடத்திற்கும் மேலாக இந்திய அணியை மிக சிறப்பாக வழிநடத்தி வந்தார்.
டி.20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் கேப்டன்சி மீது பல விமர்ச்சனங்கள் இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியை விட யாராலும் சிறப்பாக வழிநடத்த முடியாது என்பதை யாரும் மறுக்கவே முடியாது. விராட் கோலி இன்னும் குறைந்தது ஒரு வருடமாவது டெஸ்ட் அணியை வழிநடத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர், ஆனால் விராட் கோலியோ திடீரென டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிகொள்வதாக அறிவித்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்.
என்னதான் விராட் கோலி டெஸ்ட் தொடருக்கான கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தாலும் யாரும் நெருங்க முடியாத 3 சாதனைகளை தான் கேப்டனாக இருக்கும் பொழுது விராட் கோலி செய்துள்ளார்.
அப்படிப்பட்ட 3 சாதனைகளைப் பற்றி இங்கு காண்போம்
கேப்டனாக அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்ற விராட் கோலி
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தான் கேட்பேன் பொறுப்பேற்றதிலிருந்து 68 டெஸ்ட் போட்டிகளில் 40 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இதனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் வெற்றி சதவீதம் 58.82 ஆக இருந்தது, இதன் மூலம் டெஸ்ட் தொடரில் அதிக வெற்றிகளைப் பெற்று அதிக சதவீதத்துடன் இருக்கும் கேப்டன் வரிசையில் விராட்கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார், முதல் இரண்டு இடங்களில் ஸ்டீவ் வாக் (71.92), ரிக்கி பாண்டிங் (62.33) இதன் மூலம் இனிவரும் டெஸ்ட் தொடரில் கேப்டன் விராட் கோலியின் இந்த சாதனையை தொடுவது கொஞ்சம் கடினமான விஷயமாகும்.
