கேப்டனாகவும், வீரராகவும் ஐந்து ஐபிஎல் கோப்பைகள்;
விராட் கோலியின் சரிவிற்கும், ரோஹித் சர்மாவின் வளர்ச்சிக்கும் ஐபிஎல் தொடர் தான் முக்கிய காரணம். நம்பர் 1 வீரராக திகழ்ந்து வந்த விராட் கோலி ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பல பின்னடைவுகளை மட்டுமே சந்தித்தார். கிரிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ் போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் கொண்ட பெங்களூர் அணியை வழிநடத்திய போதிலும், விராட் கோலியால் இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் மறுபுறம் ரோஹித் சர்மாவோ ஹர்திக் பாண்டியா போன்ற பல இளம் வீரர்களை வைத்து கொண்டு, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பைகளை அசால்டாக வென்று கொடுத்தார். இதுவரை ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள ரோஹித் சர்மாவின் இந்த சாதனையையும் விராட் கோலியால் முறியடிக்க முடியாது என்பதே உண்மை.