14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசன் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு இருக்கின்றனர்.
முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் மும்பையில் மோதுகிறது.

இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல்லில் இந்த மூன்று ஹைதராபாத் வீரர்கள் தான் அதிக போட்டிகளில் பென்சில் உட்காருவார்கள் என்று பேசப்பட்டு வருகிறது.
1. ஸ்ரீவத் கோஸ்வாமி

விராட் கோலி தலைமையில் உலகக்கோப்பை வென்ற இந்திய யூ19 அணியில் இடம்பெற்று விளையாடியவர். இவர் அந்த போட்டியில் சிறந்த ரன்களை குவித்து தனது திறமையை வெளிக்காட்டினார். இதன்மூலம் இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பெற வாய்ப்பு கிடைத்தது. இதன்பிறகு கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிக்கு மாறினார். தற்போது ஹைதராபாத் அணியில் விளையாடி வருகிறார். சில போட்டிகளில் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கி இருக்கிறார். இவர் ஐபிஎல்லில் 293 ரன்கள் குவித்து 99.32 ஸ்டிரைக் ரேட் மட்டும் பெற்றிருப்பதால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கிவில்லை. இவரது இடத்தை ஜானி பேர்ஸ்டோ மற்றும் விருதிமான் சஹா பிடித்துவிட்டனர்.
2 பசில் தம்பி

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் போட்டியான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இவர் ஐபிஎல்லில் தேர்வு செய்யப்பட்டார். குஜராத் லயன்ஸ் அணியால் 85 லட்சம் ரூபாய்க்கு தேர்வு செய்யப்பட்டார். அந்த சீசனில் 11 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்பிறகு 2018 சீசனில் ஹைதராபாத் அணியில் தேர்வான இவர் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்து மோசமாக பந்துவீசியதால் இவருக்கு மேலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2019வது சீசனில் 9.16 மற்றும் 2020வது சீசனில் 11.50 எகானமி ரேட் பெற்று தொடர்ந்து சொதப்பி வருவதால் இந்தாண்டு இவருக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.
3 சித்தார்த் கவுல்

2018 ஐபிஎல்லில் 17 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் மொத்தம் 21 விக்கெட்களை எடுத்து சிறப்பாக விளையாடி இருந்தார். இவரும் விராட் கோலியின் யூ19 அணியில் விளையாடியவர். இதன்பிறகு 2019ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் இவர் 7 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்கள் மட்டும் வீழ்த்தினார். இதுபோன்று இளம்வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால் இந்த முறை சீனியர் வீரர்களை வைத்து ஹைதராபாத் அணி களமிறங்கும் என்பதால் இவருக்கு வாய்ப்புகள் குறைவு.