2023 ஐபிஎல் தொடரில் ரவீந்திர ஜடேஜாவை தட்டி தூக்க காத்திருக்கும் மூன்று அணிகள்.
2022 ஐபிஎல் தொடர் ஜடேஜாவிற்கு மிகப்பெரும் சோதனை என்றே கூறலாம், அந்த அளவிற்கு கேப்டன்ஷிப், அணியின் ஏற்பட்டிருக்கும் சிக்கல் என அனைத்துமே அவரை மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தொடர்புடைய அனைத்து பதிவுகளையும் ஒவ்வொன்றாக டெலிட் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வமான பக்கத்தை அன்பாலோ செய்து சென்னை அணியின் மீதிருக்கும் தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் 2023 ஐபிஎல் தொடரில் ரவீந்திர ஜடேஜா சென்னை அணியின் விளையாட மாட்டார் என்று வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
இந்த நிலையில் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று ரவீந்திர ஜடேஜாவை தட்டி தூக்க ஒவ்வொரு அணிகளும் கழுகு போன்று காத்துக் கொண்டுள்ளது.
அந்த வகையில் 2023 ஐபிஎல் தொடரில் ரவீந்திர ஜடேஜாவை தட்டித் தூக்க காத்திருக்கும் மூன்று அணிகள் குறித்து இங்கு காண்போம்.
மும்பை இந்தியன்ஸ்
ஐந்து முறை டைட்டல் பட்டதை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, லோயர் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படும் ஒரு வீரர் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை அணில் இருந்து விலகினால் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் ரவீந்திர ஜடேஜாவை தன்னுடைய அணியில் இணைப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மும்பை அணி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.