இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டு தனது திறமையை வெளிப்படுத்தினார், இதன்காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இவருக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
அதனை மிகச் சரியாக பயன்படுத்தி தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்து அசத்தினார். இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இவர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.இவர் 2021 ஐபிஎல் தொடரில் 73 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வருகிற 2022 மெகா ஏலத்தில் இஷான் கிஷனை தட்டி தூக்க காத்திருக்கும் 3 அணிகள் பற்றி இங்கு காண்போம்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபமாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டது,சென்னை அணி தான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோன அச்சத்தின் காரணமாக போட்டிகள் பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்னும் சில ஆண்டுகளில் தோனி தனது ஓய்வு அறிவிப்பார் என்ற நிலையில் சென்னை அணிக்கு ஒரு இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நிச்சயம் தேவைப்படுகிறது, இதன் காரணமாக இளம் வீரரான இஷன் கிஷன் சென்னை அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பந்துவீச்சில் மிகச் சிறந்த அணியாக திகழும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஆண்டு கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை இதன் காரணமாக அடுத்த ஆண்டு ஹைதராபாத் அணியில் பல மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அந்த அணியின் ஜானி பேர்ஸ்டோ மற்றும் விருத்திமான் சஹா ஆகிய இருவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உள்ளனர் ஆனால் அதில் சஹா மிக மோசமான செயல்பாட்டை கொடுத்து வருகிறார்,இதன் காரணமாக இவருக்கு பதில் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேர்ந்தெடுப்பார்கள் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இஷன் கிஷன் அதற்கு ஒரு சிறந்த தேர்வாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உள்ளார். ஆனால் கொல்கத்தா அணியில் நித்திஷ் ராணா மற்றும் ராகுல் திரிபாதி தவிர மற்ற யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை,குறிப்பாக மிடில் ஆர்டரில் களமிறங்கும் அனைத்து வீரர்களும் மிக மோசமாக செயல்படுகின்றனர் இதன் காரணமாக இஷன் கிஷன் அதற்கு ஒரு நல்ல தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.