கழட்டிவிடும் பெங்களூர் அணி ; தமிழக வீரர் வாசிங்டன் சுந்தரை தட்டி தூக்க காத்திருக்கும் மூன்று அணிகள் !! 1

இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வந்து கொண்டிருக்கும் வாசிங்டன் சுந்தர் ஐபிஎல் போட்டியில் மிக சிறப்பாக பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவருடைய அபாரமான பந்து வீச்சின் மூலம் பல முன்னணி வீரர்களை திணறடித்து சாதனை படைத்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மிக முக்கிய வீரராக வாஷிங்டன் சுந்தர் உள்ளார்.மேலும் ஐபிஎல் போட்டியில் மிக சிறந்த எக்கனாமிக் ரேட்டில் பந்து வீசக்கூடிய வீரராக வலம் வந்து கொண்டிருக்கும் வாஷிங்டன் சுந்தரை வருகிற 2022 ஐபிஎல் ஏலத்தில் மூன்று அணிகள் தேர்ந்தெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

சமீபமாக நடைபெற்ற இரண்டு ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேப்பிடல் அணி தனது மிகச்சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறது, அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக 2021 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். இதனால் இவருக்கு பதில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல் அணியை வழிநடத்தி வருகிறார். அக்ஷர் பட்டேல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் இருக்கும் நிலையிலும் அந்த அணிக்கு மற்றும் ஒரு ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறது.

கழட்டிவிடும் பெங்களூர் அணி ; தமிழக வீரர் வாசிங்டன் சுந்தரை தட்டி தூக்க காத்திருக்கும் மூன்று அணிகள் !! 2

இந்நிலையில் u-19 ரிஷப் பண்ட் கேப்டன்ஷிப் கீழ் விளையாடிய வாசிங்டன் சுந்தர் 2022 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணிக்கு மிகவும் உபயோகமான வீரராகத் திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஆண்டு மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. மேலும் கொல்கத்தா அணியில் நித்திஷ் ராணா மற்றும் ராகுல் திரிபாதி தவிர மற்ற யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை,குறிப்பாக அந்த அணியின் ஆல் ரவுண்டர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படவில்லை. மேலும் லோ ஆர்டர்களில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்வதற்கு ஒரு வீரர் தேவைப்படுகிறது.

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதற்கு நிச்சயம் ஒரு ஆல்ரவுண்டர் தேவைப்படுவதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்வதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கழட்டிவிடும் பெங்களூர் அணி ; தமிழக வீரர் வாசிங்டன் சுந்தரை தட்டி தூக்க காத்திருக்கும் மூன்று அணிகள் !! 3

இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதன் காரணமாக வருகிற 2022 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் பல வீரர்கள் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அந்த அணியில் இந்திய ஆல் ரவுண்டர் ஒருவர் தேவைப்படுகிறது அதிலும் குறிப்பாக சுழற்பந்து வீசகூடிய ஒரு ஆல்ரவுண்டர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தேவைப்படுகிறது.

ஏனென்றால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக இலங்கை அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இருக்கிறார் இதன் காரணமாக வாசிங்டன் சுந்தர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஒரு நல்ல தீர்வாக அமைவர் என்று கூறிவிட்டு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *