இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் மிக சிறப்பாக ஆரம்பித்து விளையாடப்பட்டு வந்தது ஆனால் பாதி தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சில நாட்களுக்கு முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் பிசிசிஐ வெளியிட்டது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருப்பதால் ஒரு சில அணிகளுக்கு அது நல்ல செய்தியாக படவில்லை. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தியாவில் நடந்த 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் சென்ற ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடந்த ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் மோசமாக விளையாடி, ப்ளே ஆப் சுற்றுக்கு அந்த அணி தகுதி பெறவில்லை. எனவே சென்னை போல ஒரு சில அணிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருப்பதால் அந்த அணிகளுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியாக இருக்காது.
ஆனால் மறு வேளையில் ஒரு சில அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அந்த அணிகள் எவை என்று தற்போது பார்ப்போம்.