மும்பை இந்தியன்ஸ்
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடந்த அனைத்து போட்டிகளிலும் மிக அற்புதமாக விளையாடி ஐபிஎல் தொடரை கைப்பற்றியது. ரோஹித் சர்மா தலைமையில் மும்பை அணி கைப்பற்றிய ஐந்தாவது கோப்பை அது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மைதானங்கள் பேட்டிங்கிக்கு சாதகமாக இருப்பதால், மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் மிக சிறப்பாக செயல் பட்டார்கள். குறிப்பாக அதிரடி ஆல்ரவுண்டர் வீரர்கள் போலார்டு, ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் மிக சிறப்பாக இறுதி ஓவர்களில் விளையாடினார்கள்.

பந்து வீச்சிலும் மும்பை அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் போல்ட் ஜோடி அனைத்து போட்டிகளிலும் மிக சிறப்பாக பந்து வீசிய விக்கெட்டுகளை குவித்து தள்ளினார்கள்.
இந்த செய்தி மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
நிச்சயமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் அனைத்து வீரர்களும் மிக சிறப்பாக பங்களிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.